நன்றி! நன்றி!! நன்றி!!!

நன்றி!  நன்றி!!  நன்றி!!!


    11.05.2020 முதல் 17.05.2020 வரை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையும் இணைந்து நடத்திய கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக்கல்வி’' இணைய வழி ஏழு நாள் சான்றிதழ் வகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள்: பள்ளி ஆசிரியர்கள்; ஆய்வாளர்கள்; மாணவர்கள்; அரசு அலுவலர்கள்: பிறதுறை சார்ந்த பெரியோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான கருதுகோளை வழங்கி ஊக்கம் தந்த புதுச்சோரி மையப் பல்கலைக்கழகத்தின்  நிகழ்கலைத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.சுப்பையா அவர்களுக்கும் இச்சான்றிதழ்க் கல்வி வகுப்பில் பங்கேற்றவர்களுக்குப் பழமரபு நாடகங்கள் குறித்து உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் கோ. பழனி அவர்களுக்கும் வீதி நாடகங்கள்’  குறித்து உரையாற்றிய சென்னைக் கலைக்குழுவின் நிறுவனர் திரு.பிரளயன் அவர்களுக்கும் நவீன நாடகங்கள்குறித்து உரையாற்றிய மூன்றாம் அரங்கின் நிறுவனர் திரு கே.எஸ்.கருணா பிரசாத் அவர்களுக்கும் குழந்தைகள் நாடகங்கள்குறித்து உரையாற்றிய நாடகவியலாளர் முனைவர் காந்திமேரி அவர்களுக்கும் கல்விப்புலத்தில் அரங்கம் குறித்து உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்களுக்கும் தலித்திய நாடகங்கள் குறித்து உரையாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழகக்  கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைத்தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் அவர்களுக்கும் பெண்ணிய நாடகங்கள் குறித்து உரையாற்றிய மரப்பாச்சி நாடகக்குழுவின் நிறுவனர் பேராசிரியர் அ.மங்கை அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த நிகழ்வை நடத்திட அனுமதி வழங்கியதோடு வழிகாட்டி நெறிப்படுத்திய எங்களின் மாண்பமை துணைவேந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

     பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் இன்னும் பதினைந்து நாட்களில் அவரவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இனி வருங்காலங்களில் எங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழக  வலைத்தளத்தின் வழி அறிந்துகொள்ளலாம். நாடகத்துறை நிகழ்வுகளின் காணொளிகளை நாடகத்துறையின் YouTube Channel இல் காணலாம்.  


இதுவரை செய்யாதிருந்தாலும் இப்போது நாடகத்துறையின் YouTube Channel ஐ subscribe செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.


     

ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் பெ.கோவிந்தசாமி

பேராசிரியர் மற்றும் தலைவர்

நாடகத்துறை

முனைவர் கு.சின்னப்பன்

பேராசிரியர் மற்றும் தலைவர்

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Comments

  1. நன்றி கூற நாங்களே அதிகம் கடமைப்பட்டுள்ளோம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு நிகழச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி முடித்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு எங்கள் நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா.

      Delete
  2. அனைத்து நிகழ்வுகளும் அருமை.பயனுள்ளதாக அமைந்தது.

    ReplyDelete
  3. அருமையான ஒருங்கிணைப்புக்குகுப் பாராட்டுக்கள் ஐயச்

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் ஐயா, மேன்மேலும் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. தொடரட்டும் பணி
    நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள வகுப்புகள் ஐயா. நன்றிகள் பல

    ReplyDelete
  7. நன்றி கூற நாங்களே அதிகம் கடமைப்பட்டுள்ளோம் ஐயா.

    ReplyDelete
  8. மிகச்சிறப்பான கற்றல் கற்பித்தல் நிகழ்வு,.
    கற்பித்தலில் புதியதொரு உத்தியைை கையாள வழி தந்தது. நம்முைடைய இணையவழி வகுப்பு

    ReplyDelete
  9. கேடான கேடி நன்றிகள் ஐயா

    ReplyDelete
  10. நாடகம் குறித்த விழிப்புணர்வையும் தகவல்களையும் பெற்றோம்

    ReplyDelete
  11. ஏழு நாட்களும் அமர்வுகள் சிறப்பாக இருந்தன. கருத்து வழங்கியவர்கள் சிறந்த புலமை பெற்றிருந்தார். கடைசி இரு நாட்களும் பெண்கள் இருவரின் உரை மிக்க அருமை.

    ReplyDelete
  12. சிறப்பான ஒரு கண்ணோட்டத்தை நாடகத்தின்பால் செலுத்த உதவியாக இருந்தது.நன்றி ஐயா.

    ReplyDelete
  13. மிக அருமையான நிகழ்வு

    ReplyDelete
  14. மிகுந்த மகிழ்ச்சி ஐயா, அனைத்து வகுப்புகளும் சிறப்பாகவே அமைந்தன.பல்வேறு புதிய செய்திகளை நாடக வியல் தொடர்பாக அறிந்து கொண்டோம். நன்றி!நன்றி.!.நன்றி ஐயா !

    ReplyDelete
  15. மிக அருமையான நிகழ்வு

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியைத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  17. பெரும் வாய்ப்பினை அருளிய பல்கலைக்கழகத்திற்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி.
    கன்னிக்கோவில் இராஜா
    சிறார் இலக்கிய எழுத்தாளர்
    சென்னை

    ReplyDelete
  18. மிக அருமையாக இருந்தது.பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. முனைவர் இரா. ஏஞ்சல், உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி, மதுரை - 18.

    ReplyDelete
  19. Our attitude is fulfill with gratitude.Thanking you for your golden opportunity.

    ReplyDelete
  20. மிக்க நன்றிங்க ஐயா. இப்பயிலரங்கம் மிகுந்த பயனுள்ளதா இருந்து

    ReplyDelete
  21. நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும் ஐயா. இன்னும் இதுபோன்ற நிறைய வாய்ப்புகளை உருவாக்குங்கள். உங்களைப் பின்தொடர காத்திருக்கின்றோம். நன்றி வணக்கம்

    ReplyDelete
  22. இந்த கோரனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக ஆக்கிட பெருதும் வழிகாட்டிய தமிழ் பல்கலைகழகத்திற்கும் உதவி செய்த துணைவேந்தர் முனைவர்கள்கள், பேராசிரியர்கள், மற்றும் எம் மண்ணின் மைந்தன் எங்கள் தலித் வழிகாட்டி அய்யா பதிவாளர் கு.சின்னப்பன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி....இவண் மு.அபுல்துரை ஆசிரியர் M.D.தொடக்கப்பள்ளி மாத்தூர், செஞ்சி.விழுப்புரம் மாவட்டம்.

    ReplyDelete
  23. உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுக்குத் தாங்கள் வழங்கியது அரிய வாய்ப்பு. நன்றி ஐயா. இவண் மு. செல்வி உயர்நிலைப்பள்ளி ஆசிரியை, கோட்டைப்பட்டி, திண்டுக்கல்

      Delete
  24. மிக மிக சிறப்பாக இந்நிகழ்வை நடத்தி அதில் எங்களை பங்குகொள்ள செய்து கற்றல் கற்பித்தலில் நாடக அரங்கின் அருமையை உணர்த்திய தங்களுக்கு நாங்கள் தான் நன்றி பாராட்ட வேண்டும் அய்யா

    நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
  25. மிக்க நன்றி
    தொடரட்டும்.

    ReplyDelete
  26. நாடகத்தமிழ் குறித்த பல்வேறு தளங்களை, நான் அறிந்த கொள்ள, நற்றுணை புரிந்தது தாங்களன்றோ? நன்றி நவில்கிறேன் நுமக்கய்யா!

    ReplyDelete
  27. அருமை ஐயா. . சிறப்பான முன்னெடுப்பு ... நிறைய கற்றுக்கொண்டோம் ... ஊரடங்கை சிறப்பாக பயன்படுத்த நல்வழிகாட்டிய உங்களுக்கு என் மேலான நன்றிபல ...💐💐💐

    ReplyDelete
  28. நாடகம் குறித்த பல அறிய தகவல்களை அத்துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்டு தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  29. நாடகம் குறித்த பல அறிய தகவல்களை அத்துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்டு தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  30. நல்ல முயற்சி.. மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. நாடக கலை மேலுள்ள ஆர்வத்தை மேலும் அறியபடுத்திய தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  32. நல்ல பயனுள்ள கருத்துக்களாக இருந்தது

    ReplyDelete
  33. நாங்கள் தான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் ஐயா இந்த ஏழு நாள் வகுப்புகள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்தது பயனுள்ள தாக இருந்தது அனைத்து பேராசிரியர்களுக்கும் மிக்க நன்றி.... ஐயா

    ReplyDelete
  34. ஏழு நாட்களும் சிறப்பாக அமைந்தது இருந்தது

    ReplyDelete
  35. தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆற்றிய மாபெரும் தமிழ்ப்பணி.ஒருவார காலம் மாணவர்களாய் இருந்து பயனுள்ள தகாவல்களைக்கேட்க நல் வாய்ப்பினைத் தந்தமைக்கு உளம் நிறைந்த நன்றி.ஒருங்கிணைப்பாளர்களான உங்களை என்றென்றும் தமிழ் உலகம் பாராட்டும்.தங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர விழைகின்றேன்

    ReplyDelete
  36. சிறப்பான முன்னெடுப்பு. இதுபோன்ற அரிய நிகழ்வுகளை மேலும் நிகழ்த்தி தமிழ் ஆய்வுப்பணியைத் தொடர பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திற்கும், ஒருங்கிணைத்த அனைத்து பேராசிரியர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. அரும் நிகழ்வு அய்யா. அரும் வாய்ப்பிற்கு நன்றிகள் நாளும்...

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா. ஏழு நாட்களில் ஏழு மணி நேரம் சென்றது தெரியவில்லை. மகிழ்ச்சி ஐயா. இது போன்ற நிகழ்வுகளை மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  39. நாடகம் பற்றிய தகவல்களை அருமையாக இருந்நது

    ReplyDelete
  40. நேரத்தை பயன் உள்ளதாக மாற்றி தந்தது க்கு நன்றி ஐயா

    ReplyDelete
  41. நன்றி நாங்கள் தான் கூற வேண்டும். தற்பொழுது உள்ள சூழலில் தாங்கள் நடத்திய ஏழு நாட்கள் இணைய வகுப்பில் நாடக மரபுகள் குறித்த பல கருத்துக்களை அறிந்து கொண்டேன் என்பதை நினைக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பயன் உள்ளதாகஅனைவரின் கருத்துரைகளும் இருந்தன. நன்றிகள் பல.....முனைவர். ந. சுபா, தமிழ் உதவிப் பேராசிரியர், அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம்.8

    ReplyDelete
  42. நன்றி ஐயா எங்கள் நேரம் நல்ல நேரமாக அமைந்தது கொடுத்த உங்களுக்கு நன்றி இதன் மூலம் பல கருத்தை வழங்கிய அனைத்து ஆசிரியர்பெருமக்களுக்கும் நன்றி கூறி வணங்குகிறேன்

    ReplyDelete
  43. மிகவும் பயனுள்ள தகவல்கள்.சிறப்பான ஏற்பாடுகள் செய்தளித்த தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  44. மிக அருமையான நிகழ்வை ஏற்பாடு செய்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா,,,

    ReplyDelete
  45. மிகவும் பயனுடையது

    ReplyDelete
  46. அரிய தகவல்கள், எளிமையான கருத்து. தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  47. கற்றலும் கற்பித்தலும் தொடர்ந்து நிகழ தாங்கள் மேற்கொண்ட ஒருங்கிணைப்பும் வாய்ப்பும் எங்கள் மாணவர்களுக்கும் கற்பித்து பயன்பெற செய்வோம்.நன்றி

    ReplyDelete
  48. சிறப்பான நிகழ்வினை சுவையுடன் அளித்த தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
    எதிர்காலத்தில் இது போன்ற பல இலக்கிய நிகழ்வுகளை எதிர்நோக்குகிறோம்
    நன்றியுடன்

    --பல்லவிகுமார்

    ReplyDelete
  49. We learnt more information sir. Very interesting sessions. When we get certificate for that sir

    ReplyDelete
  50. மிகவும் மகிழ்ச்சி ஐயா.
    சிறப்பாக அமைந்தது.
    ஏற்பாடு செய்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி

    ReplyDelete
  51. சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லை babysreeju@gmail.com

    ReplyDelete
  52. சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லை saranyabalaya@gmail.com

    ReplyDelete
  53. சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லை
    navakkeri@hotmail.com

    ReplyDelete
  54. வணக்கம் ஐயா..மிக நல்ல வாய்ப்பாக ஏழுநாட்களும் அமைந்திருந்தது. மிக்க நன்றி...ஆனால்
    அதற்கான சான்றிதழ் இதுவரை அனுப்பப்படவில்லையே .

    ReplyDelete
  55. சான்றிதழ் எனக்கும் வந்து சேரவில்லை ஐயா
    karthickvm1997@gmail.com

    ReplyDelete
  56. No one get the certificate till today.. Let us wait for few more days

    ReplyDelete
  57. Vanakkam sir!!!
    7days vaguppilum kalandhukonden and then feed back mail submit seidhullen sir but tonally two days certificates only came sir plz consider my problem sir, thank you sir

    ReplyDelete

  58. Still i didn't get the certificate sir.please consider me. Thank you sir.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்