பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பெண்ணிய அரங்கம்

முனைவர் அ. மங்கை ,

பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர்,

ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு

கற்றல், கற்பித்தல், நிகழ்த்தல் நோக்கில் பெண்ணிய அரங்கம்

பெண்ணுக்கும் அரங்கத்திற்குமான உறவு காலம் காலமாக இழுபறியாக உள்ள ஒன்றுபெண்ணுடல் பலர் பார்வைக்கு முன் தோன்றுவது, அசைவது, உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை தந்தைமை ஆதிக்க சமூகத்திற்கு ஒவ்வாமை கொடுப்பதுஅதே சமயம், கேளிக்கை, கூடுதல் இன்பம் நயக்கும் பெண்கள் தேவை எனக் கருதுவதும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டின் மறுபக்கம்எனவே ஆடல் மகளிர், பரத்தை என்ற தனிப் பிரிவை சங்க காலத்திலேயே  நாம் காண்கிறோம்இம்முறை இந்திய, ஆசிய நிலப்பரப்பெங்கும் இருந்து வந்துள்ளதுஅரங்கில் தோன்றும் பெண்களை இழிவாகக் காண்பதும் இதனையொட்டி எழுந்ததேஅதையெல்லாம் மீறி பெண்கள் பலர் இத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளனர்வங்கத்தைச்  சேர்ந்த பினோதினி தாசி தனது சுய சரிதையை அமர் கதா என்ற பெயரில் 1913 இல் எழுதினார்மராத்தியிலும் பல பெண் கலைஞர்கள்  தம் அனுபவங்களைப் பதிவு செய்தனர்தமிழகத்தில், எழுத்து பூர்வ பதிவு இல்லாவிடினும், பல பெண்கள் பங்கேற்றனர் என்பதை அறியமுடிகிறதுபாலாமணி அம்மாள் நடத்திய பெண்கள் குழு புகழ் பெற்றுத் திகழ்ந்தது. இவை அரங்கத்தில் பெண்கள் பங்கு பற்றிய சில குறிப்புகள்.

பெண்ணிய அரங்கம் என்பது கோட்பாடு சார்ந்தது. பால் வேறுபாடுகளை உருவாக்கி, நிலைப்படுத்தும் தந்தைமை ஆதிக்கம், அதன் முதுகெலும்பான எதிர்பாலின விழைவு/ உறவு ஆகியவற்றைக் கேள்விக்காட்படுத்துவது.   பெண்ணிய அரசியல் செயல்பாடுகளுக்கு தோள் கொடுப்பதுஅந்த வகையில் பெண்ணிய செயல்பாடுகள் முனைப்பு பெற்ற 1979 முதல் அரங்கத் துறையில் பெண்கள் முன்னெடுத்த / செயல்படுத்திய இடையீடுகள் மூலம் இந்திய / தமிழக சூழலில் பெண்ணிய அரங்கம் இயங்கும் விதம் குறித்த உரையாக இது அமையும்.

-          பெண் சார் சமூகச் சிக்கல்கள்வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பெண் சிசு/ கருக் கொலை இன்ன பிற.

-          அரங்கத்தில் உள்ள பெண் வெறுப்புச் சிந்தனைகள்பெண் வேடம் அணியும் ஸ்த்ரீ பார்ட், பலிகடாக்கள், பரிதாபத்திற்கு உரியவர்கள், பெண்கள் பங்கேற்கும் வடிவங்களான மனை சார் தாலாட்டு, ஒப்பாரி….

-          நடைமுறைச் சிக்கல்கள்நேரம், பயிற்சி, பாகுபாடு, வகைமாதிரிப் பாத்திரங்கள்.

இவற்றுக்கு எதிர்வினையாக பெண்ணிய அரங்கம் முன்வைத்த செயல்பாடுகளை பின்வருமாறு தொகுக்கலாம்:

-          தொன்மங்கள்/ பனுவல்கள் மறுவாசிப்பு: மௌனக் குறம், ஔவை, மணிமேகலை

-          அரங்கக் கூறுகளை மீள்பார்வை செய்தல்.- ஸ்த்ரீ பார்ட் அனுபவம், வெறியாட்டம் (ஒப்பாரி வடிவம்), மாற்று வெளி உருவாக்கம் (கிச்சன் கதா)

-          வரலாற்றைக் கட்டுடைத்தல் / கட்டமைத்தல்சாவித்திரிபாய், மணியம்மா பற்றிய நாடகங்கள், காலக் கனவு, ஆண்மையோ ஆண்மை

-          பாலியல் விழைவு: கண்ணாடி கலைக் குழு, கட்டியக்காரி குழுவின்  மொளகாப்பொடி, . ரேவதியின் வெள்ளை மொழி.

-          நிகழ்வு காலம்/ வெளி, பயிற்சி முறையியல், சன நாயகம் மிக்க குழுப் பண்பாடு, கூட்டு முயற்சி.

பால் சமத்துவத்தைப் பேணும், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையும், மனிதாயத்தை வலியுறுத்தும் அகப் புற உலகை உருவாக்கும் கனவுதான் பெண்ணிய அரங்கத்தின் அச்சாணி.

 

பார்வை நூல்கள்:

அண்ணாமலை, சி.,நவீன நாடகம்பெண்கள்”, தமிழ் நாடகம்- சில ஆளுமைகள், சென்னை: தி பார்க்கர், 2001, பக் 11 -28

கீதா, ., காலக்கனவு, புத்தா நத்தம்: அடையாளம், 2009

மங்கை, .,”பெண்ணிய அரங்கத்தை நோக்கி…”, மௌனக்குறம், (சே.இராமானுசம்), சென்னை: மௌனக்குரல், 1996, பக் 10 -18

--------, மூன்று நாடகங்கள், தஞ்சாவூர்: அன்னம், 2003

  நந்தமிழ் நங்கை, .,முடிவில்லாத உரையாடல்: பெண்கள் நாடகங்கள் பனிரெண்டு, சென்னை: மாற்று, 2009

நிர்மலா, சு., தமிழ் நாடக நடிகையர்: ஒரு சமூகவியல் பார்வை, சென்னை: காவ்யா, 2003

ஜெயரஞ்சனி இராசதுரை., ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்: ஒரு பெண் நிலைவாத நோக்கு, கொழும்பு/சென்னை: குமரன் புத்தக நிலையம்: 2003

Mangai, A., Acting Up: Gender and Theatre in India, 1979 Onwards, New Delhi: LeftWord, 2015

------, “Staging Feminist Theatre”, Thinking Gender, Doing Gender, (Ed. Uma Chakravarti), Orient Blackswan & Indian Institute of Advanced Study, Shimla, 2016

------, “Staging Feminist Consciousness”, Disciplinary Dialogues on Social Change: Gender, Early Childhood and Theatre, (Ed. Nitya Rao), New Delhi: Academic Foundation, 2016

Subramanyam, Laksmi (ed.) Muffled Voices – Women in Modern Indian Theatre, New Delhi: Har Anand Publications: 2002

 முனைவர் அமங்கை 

. மங்கை தமிழ் நாடகத் துறையில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்இவரது இயற் பெயர் வெ. பத்மாசென்னை  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்சென்னைக் கலைக் குழு, சக்தி, பல்கலை அரங்கம், மௌனக் குரல், மரப்பாச்சி ஆகிய குழுக்களின் உருவாக்கத்திலும், பணிகளிலும் பங்கேற்றவர்மட்டக் களப்பைச் சேர்ந்த சூரியா பெண்கள் கலாச்சாரக் குழுவுடன் இருபதாண்டுகளுக்கு மேலாக இணைந்து பயணிப்பவர்நடிகர், நெறியாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர்

மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதிய சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட  ஔவை உள்ளிட்ட 5 நாடகங்களை நெறியாள்கை செய்தவர்பெண்ணிய ஆய்வாளரான வ. கீதா எழுதிய நாடகங்கள் அனைத்தையும் நெறியாள்கை செய்தவர்அரங்கவியல் ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்

சென்னை ஆசிய இதழியல் கல்லூரி (Asian College of Journalism), டெல்லி தேசிய நாடகப் பள்ளி ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர்தேசிய நாடகப் பள்ளி கல்விக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் (2013 – 2017).  ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக நாடகத் துறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருப்பவர்.

இவரது நூல்கள், கட்டுரைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் வெளிவந்துள்ளன. இந்தியப் பெண்ணிய அரங்கம் குறித்த இவரது Acting Up என்ற நூல் லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது (2015).

Comments

  1. அருமை அருமை

    ReplyDelete
  2. உழைப்பு மற்றும் பெண்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி....

    ReplyDelete
  3. பெண்ணியம் சார்ந்த பல்வேறு பயனுள்ள வெளியீடுகள் அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  4. பெண்ணியம் பற்றிய கருத்துக்களை நன்கு அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  5. பண்ணிய அரங்கம் சார்ந்த கருத்துகள் அருமை

    ReplyDelete
  6. மங்கை அவர்களின் உரை பெண்ணிய உலகத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிச்சமிட்டு கண் காட்டுகிறது....அருமை

    ReplyDelete
  7. Amazing session sir!-Dr.S.Amutha

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்