பாடக்குறிப்புகள் | 15.05.2020 ஐந்தாம் நாள் | கல்விப்புலத்தில் அரங்கம்


கல்விப்புலத்தில் அரங்கம்
பேராசிரியர் வீ. அரசு,
பேராசிரியர் ( பணி நிறைவு ), 
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம் 

பாடக் குறிப்பு

கல்விப்புலம் என்பது மனிதர்களுக்கு அறிவு சார்ந்த பயிற்சியை வளர்த்தெடுப்பது ஆகும்.  நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை அறிதல் என்பது கல்விப்புலப் பயிற்சியின் மூலம் சாத்தியம்.  இவ்விதப் பயிற்சி சார்ந்து அறிவியல், கலை என்று நாம் வசதிக்காகப் பிரித்துக் கொள்கிறோம்.  கலைத்துறையில், அரங்கம் என்பது முக்கியமான புலம் ஆகும். 
கல்விப்புலங்களில் இவ்வகையான அரங்கைப் பற்றி உரையாடுவதில் கீழ்க்காணும் மூன்று அடிப்படைகளை கவனப்படுத்த விரும்புகிறேன்:
  • பயிற்று முறையாக (Pedagogy ) அரங்கத்தை கல்விப் புலங்களில் வளர்த்தெடுக்கும் சூழல்.
  • கலைத்திட்டத்தில்  அரங்கத்தை ஒரு பாடமாகப் பயிற்றுவித்தல்.
  • அரங்கத்தைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் புலமாக கல்லூரி, மற்றும் பல்கலைக் கழகங்களில் வடிவமைத்தல்.

பிரேசில் நாட்டில் பாவ்லோ ஃப்ரையர் ஒடுக்கப்பட்டோருக்கான பயிற்றுமுறை (Pedagogy of the Oppressed) என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தினார்.  அதில் கல்வி முறையியல் என்பது பல்வேறு மௌனங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதை விளக்குகிறார்.  சன நாயகத் தன்மையற்ற பயிற்று முறையை விமரிசிக்கிறார்.  பாவ்லோ ஃப்ரையர்  தாக்கத்தில் கூகி வா தியாங்கோ , அகஸ்தோ போவால்  ஆகியோர் அரங்க முயற்சிகளில் ஈடுபட்டனர்.  கல்விக்கும் அரங்கத்திற்குமான தொடர்பு இது. 

இங்கு கல்வி பயிற்றும் ஆசிரியர்களுக்காக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பயிற்சிப் பட்டயம், பட்டப் படிப்பாக கல்வியியல்  என்பவை நடைமுறையில் உள்ளன.  இந்தப் பாடங்களின் கலைத் திட்டத்தில் அரங்கம் என்பதே இடம் பெறவில்லை. பயிற்சியாக அரங்கத்தைக் கொள்வதில் நமது கல்விப்புலத்தின் மிகப் பெரும் அவலமாக இதைக் கருதலாம்.  இந்தப் பின்புலத்தில், தமிழ்ச் சூழலில் அரங்கத்தைப் பயிற்றுமுறையாக ஆக்குவது குறித்து சிந்திக்கலாம்.
 
நமது கல்லூரி, பல்கலைக்கழக கலைத்திட்டத்தில், அரங்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதையும் நாம் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.  அரங்கம் என்ற புரிதல் இன்றி, நாடகப் பனுவல்களை தேர்வு நோக்கிலான சரக்காகப் பயன்படுத்தும் போக்கு உள்ளது. 
அரங்கத் துறை என்பது கல்விசார்ந்த பயில்துறையில் உலக அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தமிழ் பல்கலைக் கழகம், புதுவைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் அரங்கம் தொடர்பான படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் நடைமுறையில் உள்ளன. 
கல்விப்புலத்தில் இருந்து சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்யும் தன்மை அரங்கத்திற்கு உண்டு. அது தமிழ்ச் சூழலில் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் உரையாடல் நிகழ்த்த வேண்டும்.  

பார்வை நூல்கள்
  • தாம்சன், ஜார்ஜ்., மனித சாரம்: அறிவியல், கலை ஆகியவற்றின் தோற்றுவாய்கள், எஸ். வி. ராஜதுரை (மொ. பெ.), சென்னை: என். சி. பி. எச்., 2014
  • மங்கை, . (மொ.பெ.), அரங்கம்அரசியல்- அழகியல்: அரங்கக் கோட்பாடுகள், சென்னை: மாற்று, 2010
  • சண்முகலிங்கம், , குழந்தை., நாடக வழக்குஅரங்கக் கட்டுரைகளும், நேர்காணல்களும் , கந்தையா, ஸ்ரீ. கணேசன் (தொகு.), இணுவில்: இணுவில் கலை இலக்கிய வட்டம், 2003
  • சிவானந்தன், ., இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் நாடக அரங்கம், கொழும்பு: நடிகர் ஒன்றியம், 1979
  • Boal, Augusto., Theatre of the Oppressed, New York: Theatre Communications Group, 1985
  • Freire, Paulo., Pedagogy of the Oppressed, UK: Penguin Random House, (I ed. 1970), 2017
ஆசிரியர் குறிப்பு
பேராசிரியர் வீ. அரசு, 

பேராசிரியர் வீ. அரசு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியக் கல்வியை, ஆய்வை விரிவான தளத்தில் முன்னெடுத்தவர். தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் முதலான துறைகளோடு இணைத்து தமிழ்க்கல்வியை சமூகவியல் கல்வியாக வளர்த்தெடுத்தவர்இம்முயற்சியை, அதே தன்மையோடு அவரது ஆய்வு மாணவர்கள் பலர் தொடர்கின்றனர்.  


தமிழ்ச்சமூகம் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகளை  அரிதான ஆவணங்களிலிருந்து தொகுத்தும் பதிப்பித்தும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தி வருபவர்.
அச்சுப் பண்பாட்டுத் துறை சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளார்.  தமிழியல் ஆய்வு வரலாற்றில் தனித்த  ஆளுமைகள், இயக்கங்கள் தொடர்பான ஆய்வுகளையும் செய்துள்ளார்.  சங்கரதாஸ் சுவாமிகள், . . சி., புதுமைப்பித்தன், . ஜீவனாந்தம், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார். சென்னை இலௌகீக சங்கம் என்னும் அமைப்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.  

Comments

  1. தங்கள் வகுப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. தங்கள் உரையைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்

    ReplyDelete
  3. சிறப்பான உரை

    ReplyDelete
  4. To day class excellent

    ReplyDelete
  5. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  6. வணக்ம் ஐயா, உங்களைபோன்ற உயர்ந்தவர்களின் ,எனக்கு ஊக்கத்தையும் ,ஆக்கத்தையும் அளிக்கின்றது,நன்றி

    ReplyDelete
  7. மிகவும் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா

    ReplyDelete
  9. 5 ம் நாளுக்கான பின்னூட்டம் படிவம்

    ReplyDelete
  10. மிக அருமையான சிறப்பான கருத்துரை அய்யா

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
  12. மிக அவசியமான அரங்க செயல்பாட்டினை நாம் முன்னெடுக்க தேவையான வழிகாட்டலை அமைத்தது பேரா. அரசு அவர்களின் உரை..சிறப்புரை!

    ReplyDelete
  13. ஐயா தங்கள் உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

    ReplyDelete
  14. நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்