பாடக்குறிப்புகள் | 13.05.2020 மூன்றாம் நாள் | நவீன நாடகங்கள்



நவீன நாடகங்கள்
கே.எஸ்கருணா பிரசாத்,
நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் 
மூன்றாம் அரங்கு


தமிழ்ச் சூழலைப் பொருத்தவரையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான நாடக மரபு உண்டு. அதிலும் குறிப்பாக 18ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மிகவும் வளமான நாடக மரபு இருந்திருக்கிறது. உதாரணமாக இசை நாடக மரபு, தெருக்கூத்து, ஸ்பெஷல் நாடகங்கள், நாவல்ஸ், தொழில்முறை நாடகங்கள், பயின்முறை நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், சபா நாடகங்கள் என நகரம், கிராமம் என்கிற பேதமில்லாமல் தமிழகமெங்கும் நாடகச் செயல்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் முற்றிலும் வேறுபட்ட நவீன நாடகத் தோற்றுவாய் குறித்து ஒரு பருந்துப் பார்வையுடன்கூடிய சிறு அறிமுகத்தோடு தொடங்கி, 50களிலிருந்து முற்றிலும் புதிய பரிமாணத்தோடு வீரியமிக்க பாய்ச்சலோடு உயிர்ப்போடு இருந்துவரும் நவீன நாடகச் செயல்பாடுகளின் பன்முகத்தன்மையையும் இன்று அதன் தேவை, அதன் நீட்சி, அதன் விரிவு குறித்தான வரலாற்றுப் பார்வையை முன்வைப்பதோடு, நவீன நாடக முன்னோடிகள், தொடக்ககால செயல்பாடுகள், நாடகாசிரியர்கள், குழுக்கள், நவீன நாடக வளர்ச்சிக்கென நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகள், நாடக விழாக்கள், நவீன நாடக வளர்ச்சிக்கு வித்திட்ட பல்கலைக்கழகங்களின் அளப்பரிய பணி குறித்த பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் நாடகம் என்பது கேளிக்கைக்கான ஊடகம் என்பதைத் தாண்டி சமூகம் சார்ந்த செயல்பாடுகளில், மக்களிடம் நேருக்கு நேராக உயிர்ப்புடன் எத்தகையப் பணிகளைச் செய்துள்ளது என்பது பற்றியும் கல்விப் புலத்தில், கற்றலில் எந்த அளவிற்குப் பங்காற்ற முடியும் என்பதை விவாதிப்பதோடு கற்றல் குறைபாடுள்ள மாணவர்களிடத்தில் அரங்கச் செயல்பாடானது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி, மாணவர்களது உளவியலில் நேர்மறையான வினைகளை ஆற்ற முடியும் என்பதையும் காரண காரியங்களோடு விவாதிக்கக் கூடியதாக அரங்கச் செயல்பாடு பரிணமித்துள்ளது. நவீன நாடகச் செயல்பாடானது இன்றைய நவீன உலகில் மருத்துவ உலகில் ஒரு இடையீடு செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்து சிகிச்சை அளிக்கும் முறையில் ஒரு பகுதியாக, சொஸ்தப்படுத்தும் முறைகளில் ஒன்றாக மருத்துவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருகிவரும் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டில் அரங்கச் செயல்பாட்டின் தேவையும் அதிகரித்து வருகிறது. நவீன நாடகச் செயல்பாடானது அதன் தொடக்ககால நிலையிலிருந்து வளர்ந்து, இன்று கிளைபரப்பி பெண்ணிய அரங்காக, தலித்திய அரங்காக, மாற்றுப் பாலினத்தவர் அரங்காக வடிவம் கொண்டு சமூகத்தில் ஒரு பரிதலை ஏற்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
நாடகக் கல்வி சமகாலத்தில் மற்ற துறைகளைப் போல மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள், அதன் தேவைகள், அதற்கான சரியான பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி முறைகளைப் பற்றிய புரிதலை சாதாரண மக்களுக்கும் கல்விப்புலத்தில் உள்ளவர்களுக்கும் விளக்கும் விதமாக நவீன நாடகங்கள் குறித்தான பார்வை முன்வைக்கப்படுகிறது.

மூன்றாம் அரங்கு நாடகக் குழுவின் நாடகங்கள் யூ டியூப் சேனல் https://www.youtube.com/channel/UCyfK3k35PP0QiHBuxPCyNWw/featured என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது.


பார்வை நூல்கள்

  • சக்தி பெருமாள், தமிழ்நாடக வரலாறு, வஞ்சிக்கோ பதிப்பகம், மதுரை, 1979
  • முத்துசாமி. , அன்று பூட்டிய வண்டி, அன்னம், சிவகங்கை, 1982
  • சாமிநாதன். வெ, அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை, அன்னம், சிவகங்கை, 1985
  • இராமானுஜம். சே, நாடக படைப்பாக்கம் அடித்தளங்கள், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994
  • அரசு. வீ, தமிழில் நவீன நாடகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996 (தொ.)
  • இராமசுவாமி. மு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாடகங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996
  • இராமசுவாமி மு. தமிழ்நாடகம் நேற்று இன்று நாளை, ருத்ரா பதிப்பகம், தஞ்சை, 1998
  • சாமிநாதன். வெ, யாத்ரா (இதழ் தொகுப்பு), புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை, 2005
  • கோவிந்தசாமி. பெ, காலம்தோறும் தமிழ்நாடகம், போதி வனம், சென்னை, 2012


ஆசிரியர் குறிப்பு
கே.எஸ்கருணா பிரசாத்,
நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் 
மூன்றாம் அரங்கு
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நாடகத் துறையில் பணியாற்றி வருபவர். பி.காம், எம். பட்டம் பெற்று தற்போது நாடகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 1984ஆம் ஆண்டு கூத்துப்பட்டறையோடு தன்னை இணைத்துக்கொண்டு, கூத்துப்பட்டறையில் பல்வேறு நடிப்புப் பயிற்சிகளைப் பெற்று, கூத்துப்பட்டறையின் முழுநேர நடிகராக இருந்தவர். தற்போது கூத்துப்பட்டறை அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார்.
கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி மட்டுமல்லாது தெருக்கூத்து, சிலம்பம், யோகா, பறையாட்டம், கனியான் கூத்து, துடும்பாட்டம், பரதநாட்டியம் ஆகியவற்றில் பயிற்சிபெற்றவர். குழந்தைள் நாடகத்திலும் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பை அளித்துள்ளார்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து அரங்கப் பயிற்சிகளை அளித்துக் கொண்டு வருகிறார்.
சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி, பெண்கள் கிறித்துவக் கல்லூரி, திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரி, ஜி.ஆர்.டி. கல்லூரி மாணவர்களை வைத்து நாடகங்களை இயக்கியுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக இதுவரை ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட பயிற்சிப்பட்டறைகளை நடத்தியுள்ளார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியஅரவான்என்கிற நாடகத்தை தனி ஒருவராக ஒரு மணிநேர நாடகமாக நிகழ்த்தியுள்ளார். இவர் எழுதி இயக்கியகர்ணன்என்ற நாடகத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நடிகர் நாசர் தனி ஒருவராக ஒரு மணிநேரம் நடித்துள்ளார்.

இதுவரை இயக்கியுள்ள முக்கியமான நாடகங்கள்:
கற்றுத் தேர்ந்தவர்கள்,
பாம்பு,
அரவான்,
பரமபதம்,
கொங்கைத் தீ,
கர்ணன்,
சத்ய லீலா,
என்று தணியும் இந்த தாகம்,
மனு - மெக்காலே - மனுமோகன்,
நான்காம் ஆசிரமம்,
செல்லம்மாள்,
சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் (சந்திரமோகன்)
சிலோன் காலனி,
இன்னும் உறங்குதியோ...
கீசக வதம்என பல நாடகங்களை இயக்கியுள்ளார்.


பெற்ற விருதுகள்:
அரங்கப் பயிற்சியின் வாயிலாக கல்வி கற்பித்தலுக்கான வழியைக் கண்டடைதல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற ஆய்வுக்காக மைய கலாச்சார அமைச்சகத்தின் Senior Fellowship விருது பெற்றவர்.

அரங்கக் கலையில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியமைக்காகநெய்வேலி புத்தகக் காட்சியின் வாழ்நாள் சாதனை விருதுபெற்றவர்.’
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அரங்கக் கலை பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருவதற்காக ‘Wisdom International Award’ பெற்றவர்.

ஜோக்கர் திரைப்படப் புகழ் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சமீபத்தில்வெளியாகஇருக்கும்ஜிப்சிதிரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாகமூன்றாம் அரங்குஎன்ற நாடகக் குழுவை நிறுவி பல்வேறு நாடகப் பயிற்சிப்பட்டறை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை, நடிப்புப் பயிற்சி ஆகியவைகளை அளித்துவருவதோடு பல்வேறு நாடகங்களையும் நிகழ்த்தி வருகிறார்.

Comments

  1. நான் தமிழ் மொழியை சிறப்பு பாடமாக பயிலவில்லை. ஆனால் இந்த பயிற்சியில் கற்றுத்தறப்படும் தமிழ்மொழியின் சிறப்பை அறியும்போது நான் தமிழ்மொழி தெரிந்தவன் தமிழன் என எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  2. முடிந்தால் கருத்தாளர்கள் தங்கள் தொடர்பு எண் தரலாம்.
    அல்லது இணைய முகவரி தரலாம்
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  3. நவீன நாடகங்கள் மிகவும் அருமை.நன்றி ஐயா.

    ReplyDelete
  4. வீதி நாடகங்கள் அறிமுகம் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  5. நவீனம் குறித்த விளக்கம் சிறப்பாக இருந்தது ஐயா

    ReplyDelete
  6. Balakumaran GS
    bala@culturecircuits.com
    +91-94421 42177

    ReplyDelete
  7. நவீன நாடகம் பற்றிய தகவல்களை தந்த ஐயா அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. நவீன நாடகம் பற்றிய கருத்து அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. நவீன நாடகம் பற்றிய செய்திகள் மிகவும் அருமையான கட்டுரை சொற்பொழிவு அருமை. நன்றி

    ReplyDelete
  10. very clear explanation
    நவீன நாடகம் பற்றிய விளக்கம அருமை

    ReplyDelete
  11. மிக நன்றாக இருந்தது

    ReplyDelete
  12. Good explanation Sir thank you

    ReplyDelete
  13. தங்கள் விளக்கம் அருமை அய்யா

    ReplyDelete
  14. நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக தொடர் நிகழ் வகுப்புகள் அருமை! ஆழம்! சிறப்பு!

    ReplyDelete
  15. நல்ல தெளிவான உரை நன்றி

    ReplyDelete
  16. சிறப்பாக அமைந்தது நன்றி

    ReplyDelete
  17. நவீன நாடகங்கள் குறித்து பல்வேறு பயனுள்ள தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  18. நாடகம் பற்றி பெரும்பாலும் அறியாத விளக்கம், மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன

    ReplyDelete
  19. பின்னூட்டம் அனுப்புவதில் சிக்கல் உள்ளது .

    ReplyDelete
  20. மிகச்சிறப்பான பயிற்சி

    ReplyDelete
  21. இன்றைய உரை பயனுள்ளதாக அமைந்தது. நன்றி ஐயா

    ReplyDelete
  22. நவீன நாடகம் குறித்த தங்களது விளக்கவுரை அருமை மிக விரிவாக இருக்கிறது போல் தெரிகிறது கருத்துக்கள் சுருக்கமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் . நன்றி

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்