பாடக்குறிப்புகள் | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

வீதி நாடகங்கள் 

பிரளயன்,
நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் 
சென்னைக் கலைக் குழு


கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் வீதி நாடகங்கள்


வீதி நாடகம் என்பது மக்களைத்தேடிச் சென்று அவர்களைப்பார்வையாளர்களாக வரித்துக்கொண்டு அவர்களோடு ஊடாடுகிற உரையாடுகிற ஒரு நவீன மதிப்பீடுகளைக் கொண்ட கலை வடிவம்மக்களைத்தேடிச்சென்று அவர்களது வசிப்பிடங்களில் அவர்களது புழங்கு வெளிகளில் நாடகம் நிகழ்த்தும் வழக்கம் நம்மிடம் தொன்றுதொட்டே இருந்துவந்துள்ளது.

நமது தொல்சமூகத்தில் அறியப்பட்ட பாணர்கள் விறலியர்கள் போன்ற கலைச்சமூகத்தினர் இனக்குழு த் தலைவன் முன் மட்டுமல்ல சாதாரண மக்கள் கூடும் பொது மன்றத்திலும் மக்கள் ஒன்று கூடும் விழாக்களிலும் பாடியாடி நிகழ்த்தியுள்ளனர்எனவே மக்களைத்தேடிச்சென்று நாடகம் நடத்துவது நமக்குப் புதிதல்ல. நமக்கு மட்டுமல்ல எந்தவொரு மக்கட் சமூகத்திற்கும் இது புதிதல்ல.

இங்கே நாம் வீதி நாடகம் என்று குறிப்பிடுவது இந்நீண்ட நெடிய மரபின் இன்றைய தொடர்ச்சியை மட்டுமல்ல அந்த மரபைச் செரித்துக்கொண்டு அதே நேரத்தில் மரபிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு ஒரு புதிய மதிப்பீடுகளுக்காய் முகிழ்த்தெழுந்த ஒரு புதிய கலைவடிவத்தினையே.

கலைகளின் வரலாற்றினை எழுதியவர்களெல்லாம் முதல் வீதிநாடகச் செயல்பாடாக தொட்டுக்காட்டியது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த  இரும்புஉருக்காலைத் தொழிலாளர்கள் தங்கள் ஆலை வாயிலில் நிகழ்த்திய ஒரு நாடக நிகழ்வைத்தான்.வரலாற்றாளர்கள் குறிப்பிடும் இந்நாடக நிகழ்வில், மாற்றம் பெற்றிருந்த புதிய கலை மதிப்பீடு என்னவென்று நாம் பார்க்கவேண்டியுள்ளது.

 பொதுவாக கலைஞர்களின் பாடுபொருள்  என்பது. மன்னனைப்பற்றியோ அல்லது  தம்மை ஆதரிக்கும் வள்ளல்களைப் பற்றியோதான் மையம் கொண்டிருக்கும். சுருங்கச்சொன்னால் பாட்டுடைத்தலைவர்களெல்லாம் கடவுளர்களாகவோ மன்னர்களாகவோ பிரபுக்களாகவோ தான் இருந்து வந்தனர்.

ஒரு சாதாரண மனிதன் பாட்டுடைத் தலைவனாக கதை மாந்தனாக மாற்றம் பெறுவதற்கு மனித சமூகம் , வெகு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது.
அமெரிக்க நவீன யுகத்தின் கலை இலக்கிய ஆளுமையாக அறியப்பெற்ற ஆப்ரோ-அமெரிக்கக்  கவிஞனான லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் சொல்வான்

I'm the singer, I'm the song என்று. ஆம் பாடுவோனும்  நானே பாட்டுடைத்தலைவனும் நானே என்று.அங்கே அந்த உருக்காலைத் தொழிலாளர்களும் தங்களைப்பற்றிய ஒரு நாடகத்தைத் தான் நிகழ்த்திக்காட்டினார்கள்.இப்படி சாதாரண மனிதர்கள் தங்களது கண்ணோட்டத்தில் சமூகத்தைப் பார்ப்பதும் தங்களது விருப்பார்வங்களை கனவுகளை தங்களது கண்ணோட்டத்தில் சித்தரிக்க வாய்ப்புள்ளதுமான கலைவடிவமாக வீதி நாடகம்' பிறப்பெடுத்தது.

இந்தவீதி நாடகம்' இந்தியாவிலெவ்வாறு உருக்கொண்டது, தமிழ்நாட்டிற்கு எவ்வாறு அறிமுகமானது அது என்னவிதமான வளர்ச்சிகளைக்கண்டது அக்கலைக்கு எவரெல்லாம் பங்களித்தார்கள் என்பதைப் பற்றிய ஓர் எளிய அறிமுகமே எனது உரையின் அடிப்படை.

Suggested Readings:

  • Right to Perform, essays on theatre by Safdar Hashmi, SAHMAT publications, New Delhi,1989
  • Badal Sircar, Search for a language of Theatre [Essays on Badal Sircar, by several authors] Edited by Kirti Jain, NIYOGI BOOKS, New Delhi,2016
  • Seagull Theatre Quarterly [STQ] Special Issue on Street theatre,1997 [pdf copy attached]
  • Pralayan’s Interview published in STQ,1997 [PDFversion attached]
  • Ilakkam 4 Pitchuppillai theruvilirunthu [A lengthy conversation with Pralayan] by Vaasal Publications, Madurai.

ABOUT THE SPEAKER

Pralayan Shanmugasundaram Chandrasekaran (Pralayan)
Founder and convener, Chennai Kalai Kuzhu


Founder and convener of Chennai Kalai Kuzhu, one of the well-known theatre groups, which is spearheading the modern theatre movement with the major emphasis on the open-air theatre performances in Tamil Nadu.

 As a playwright and theatre director has written, facilitated and directed more than 50 open-air plays and 23 proscenium plays including Antoine de Saint-Exupéry The Little Prince, Bertolt Brecht’s Galileo, Habib Tanvir’s Moteram ka Satyagragh, Charandas Chor, Chandrashekhara Kambara’s Mahamayi, Haruki Murakami’s The Elephant Vanishes, Na. Muthusamy’s "England", Mahendravarma Pallavan’s “Mathavilasa Prahasanam”.

Performed in all over the country and participated in several National and International theatre festivals like Bharath Rang Mahotsav NSD, Delhi, and International Theatre festival of Kerala [ITFOK].
Trained numerous theatre groups all over the state of Tamil Nadu.
Trained facilitated and worked with the several theatre groups of the country, also conducted the workshops and directed the plays across India and in countries like Norway, Malaysia, and Sri Lanka.
Guest faculty, National School of Drama, Bengaluru Centre, Bengaluru.
Guest lecturers in Dept of Performing Arts, Pondicherry Central University, Pondicherry.
As a consultant with the TVS Educational Society doing Theatre in Education Programs annually in their schools in Tumakuru, Karnataka, Hosur and Tiruvannamalai in Tamilnadu since 1998.

Comments

  1. ஐயா வணக்கம்
    மிகச் சிறப்பு.
    இந்தக் குறிப்புகளின் வழியாக... உங்கள் உரை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா மகிழ்ச்சி

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா. நான்் மலேசியாவில் வசிக்கும் தமிழ் ஆசிரியை. இப்பொழுதுதான் இந்த நாடகம் தொடர்பான விபரங்கள் எனக்குக் கிடைத்தன. என்னால் 11 மற்றும் 12 ஆம் நாளின் வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. நாளை முதல் கலந்து கொள்கிறேன். எனக்கு சான்றிதல் கிடைக்க உதவ முடியுமா? நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. Please send a mail to govindasamy.tu@gmail.com

      Delete
  4. ஆவலுடன் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

    ReplyDelete
  7. வீதிநாடகபுரிதல் ,அருமை

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. மிக அருமையாக இருந்தது இன்றைய வகுப்பு.

    ReplyDelete
  10. தங்கள் உரை மிக நேர்த்தியாக அமைந்து இருந்தது. மகிழ்ச்சி. வீதி நாடகம் குறித்து கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்திகள்

    ReplyDelete
  11. மிக மிக அருமை.

    ReplyDelete
  12. அருமை அய்யா

    ReplyDelete
  13. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  14. பயனுள்ள வகுப்பு

    ReplyDelete
  15. வீதி நாடகம் பற்றிய தங்கள் கருத்துகள் அருமை ஐயா!

    ReplyDelete
  16. அடிப்படை மக்களின் குரலே வீதி நாடகங்கள்.. நல்ல பகிர்வு மிகவும் நன்றி

    ReplyDelete
  17. தங்களது உரை மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றி

    ReplyDelete
  18. நான்ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கற்றல் கற்பித்தல் வழியில்அமையவில்லையயே

    ReplyDelete
  19. பயனுள்ளதாக அமைந்தது

    ReplyDelete
  20. வளமான வகுப்பு

    ReplyDelete
  21. உங்கள் உரை வீதி நாடகம் பற்றிய ஆழமான புரிதலை வழங்கியது.மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  22. செய்திகள் புதியன.நன்று.

    ReplyDelete
  23. அருமையான பதிவு திவுக்கு நன்றி

    ReplyDelete
  24. அருமையான பதிவு திவுக்கு நன்றி

    ReplyDelete
  25. மிக நேர்த்தியான கற்பித்தல்.. ஐயாவுக்கு அகம் நிறை வாழ்த்துகளும்.. வணக்கங்களும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்